internet

img

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் சேவைகள் அனைத்தும் ஒரே செயலியில் அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் சேவைகள் அனைத்தும் ஒரே செயலியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய செயலி ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், வொர்டு, எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் என மூன்று பிரபல செயலிகளை ஒற்றை தளத்தில் வழங்குகிறது. முன்னதாக வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டிய நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. பொது பிரீவியூ வகையில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ஆஃபிஸ் செயலி ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகவும், ஐ.ஒ.எஸ். பயனர்கள் ஆப்பிள் டெஸ்ட் ஃபிளைட் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம்.